அண்ணியும்.. மைத்துனனும் சேர்ந்து.. காட்டி கொடுத்த கண்ணாடி வளையல்.. இப்ப ஜெயிலில்!

இந்த நேரத்தில் இளைஞர் ஒருவர் மளிகை சாமான் வாங்குவதை போல வந்து, திடீரென பேச்சியம்மாளின் கழுத்தில் கிடந்த தங்க செயினை பறித்து இழுத்தார்.. இதை கொஞ்சமும் எதிர்பாராத பேச்சியம்மாள், அந்த செயினை கெட்டியாக பிடித்து கொண்டு இளைஞரிடம் போராடினார்.. ஆனால் இளைஞர் செயினை அறுத்து கொண்டு ஓடினார்.. பேச்சியம்மாள் அலறி கத்தினார். அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் இளைஞர் தப்பிவிட்டார்.

சிசிடிவி கேமிரா


இந்த திருட்டு சம்பந்தமாக அம்பத்தூர் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் திருட்டு நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தனர். அப்போதுதான், பேச்சியம்மாளின் செயினை பறித்து ஓடிய இளைஞர் ஒரு பைக்கில் ஏறி செல்வது தெரிந்தது. பைக்கை ஓட்டியவர் ஹெல்மட், ரெயின்கோட் போட்டிருந்தார்..


இளைஞர் பின்னால் ஏறி உட்காரவும் பைக் பறந்தது.. இதையடுத்து அந்த பைக் செல்லும் வழியெல்லாம் இருந்த 64 சிசிடிவி கேமிராக்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.