ஒவ்வொரு ஆண்டும் ஆவலோடு எதிர்பார்க்கப்படும் திருவிழா தான் திருச்சானூர் பத்மவதி அம்மன் கார்த்திகை பிரம்மோத்சவம். இது மொத்தம் ஒன்பது நாள் பண்டிகை. கடந்த சனிக்கிழமை தொடங்கிய விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதில் இரண்டாவது நாளாக பெரிய சேஷவாகன சேவை பற்றி இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு ஆண்டும் ஆவலோடு எதிர்பார்க்கப்படும் திருவிழா தான் திருச்சானூர் பத்மவதி அம்மன் கார்த்திகை பிரம்மோத்சவம். இது மொத்தம் ஒன்பது நாள் பண்டி
திருப்பதியில், திருச்சானூர் பத்மாவதி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறு பிரம்மோத்சவம்
கடந்த சனிக்கிழமை கொடியேற்றப்பட்டது. கொடியேற்றம் முடிந்ததும் சிறிய தங்க சேஷன வாகனத்தில் பத்மாவதி தாயார் பக்தர்களுக்குக் காட்சியருளினார். அடுத்து, இரண்டாம் நாள் காலை,பெரிய சேஷ வாகன சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது. திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் கார்த்திகை பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று காலை பத்மாவதி தாயாரின் பெரிய சேஷ வாகன சேவை கோவில் மாட வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது.
நைவேத்தியம்
பெரிய சேஷ வாகன சேவையை முன்னிட்டு கோவிலிலிருந்து புறப்பட்டு சர்வ திருவாபரண ரூபிணியாக வாகன மண்டபத்தை அடைந்த பத்மாவதி தாயார், தங்க பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து தாயாருக்கு தூப, தீப, நைவேத்தியம் சமர்ப்பணம் செய்யப்ப