பக்தர்களின் பக்தி கோஷங்களுக்கு இடையே வேத மந்திரம் முழக்கம், திவ்யபிரபந்த கானம், பக்தர்களின் பக்தி கோஷம், கலை நிகழ்ச்சிகள் ஆகியவற்றுடன் தாயாரின் பெரிய சேஷ வாகன சேவை கோவில் மாட வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது.
ஊர்வலம்
யானைகள்,காளைகள், குதிரைகள் அணிவகுத்து முன்செல்ல நடைபெற்ற தாயாரின் பெரிய சேஷ வாகன சேவையை பல்லாயிரகணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
ஹம்ச வாகனத்தில் சரஸ்வதி தேவி அலங்காரத்தில் கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த பத்மாவதி தாயார்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் கார்த்திக் பிரம்மோற்சவத்தின் இரண்டாவது நாளான நேற்று இரவு பத்மாவதி தாயார் சரஸ்வதி தேவி திருக்கோலத்தில் கைகளில் வீணை ஏந்தி ஹம்ச வாகனத்தில் எழுந்தருளி கோவில் மாடவீதிகளில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஹம்ச வாகன சேவைக்காக சரஸ்வதிதேவி திருக்கோலத்தில் கோவிலில் இருந்து புறப்பட்ட உற்சவ தாயார் வாகன மண்டபத்தை அடைந்தார்.
வாகன மண்டபத்தில் தங்க ஹம்ச வாகனத்தில் எழுந்தருளிய பத்மாவதி தாயார் கோவில் மாட வீதிகளில் ஊர்வலம் கண்டருளி காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகளுக்கு இடையே நடைபெற்ற பத்மாவதி தாயாரின் ஹம்ச வாகன திருவீதி உலாவை மாடவீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.